பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

2022-23 ஆண்டில் சணலுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 22 MAR 2022 2:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு 2022-23 ஆண்டில் சணலுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.  வேளாண் உற்பத்திச் செலவு மற்றும் விலைக்கான  குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2022-23ஆம் ஆண்டில் சணலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.4,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட ரூ.250 அதிகமாகும். உற்பத்திச் செலவில் இது சராசரியாக 60.53 சதவீதமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைந்தபட்சமாக 50 சதவீத லாபத்தை உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சணல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய விலையை உறுதி செய்யும் வகையில் இந்த விலை நிர்ணய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808121

    ***************



(Release ID: 1808193) Visitor Counter : 166