உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முன்னெடுப்பின் கீழ் முதன் முறையாக பத்ம விருது பெற்றவர்கள் புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்றனர்

प्रविष्टि तिथि: 22 MAR 2022 1:17PM by PIB Chennai

நடப்பாண்டிற்கான முதலாவது பத்ம விருது நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், இரண்டு பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளையும், எட்டு பேருக்கு பத்ம பூஷன் விருதுகளையும், 54 பேருக்கு  பத்மஸ்ரீ விருதுகளையும் வழங்கினார். இரண்டாவது பத்ம விருது வழங்கும் நிகழ்ச்சி மார்ச் 28ம் தேதியன்று நடைபெற உள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முன்னெடுப்பின் கீழ் முதன் முறையாக பத்ம விருது பெற்றவர்கள் புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்றனர்.  அங்கு அவர்கள் நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்புப் படையினரின் பெயர்களை பார்வையிட்டனர். இந்த இடத்திற்கு வருகை தருவதற்காக ஏற்பாடு செய்த அரசுக்கு விருது பெற்றவர்கள் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டனர். தேசிய போர் நினைவிடத்தை பிரபலப்படுத்தும் வகையில், மக்களும், குழந்தைகளும் வருகை தருவதற்காக அரசின் முயற்சிகளுக்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த இடத்திற்கு வருகை தந்ததன் மூலம்  தேசபக்தி, துணிச்சல், கடமை, தியாகம், ஆகியவற்றின் மதிப்புக் குறித்து அறிந்து கொள்ள முடிவதாகவும் தேச உணர்வு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதியன்று தேசியப் போர் நினைவிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808091

-----


(रिलीज़ आईडी: 1808111) आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada