பிரதமர் அலுவலகம்

தியாகிகள் தினத்தையொட்டி கொல்கத்தாவின் விக்டோரியா நினைவு அரங்கில் புரட்சிகர இந்தியா கலைக்கூடத்தைப் பிரதமர் தொடங்கிவைக்கிறார்

இந்தக் கலைக்கூடம் விடுதலைப் போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்களிப்பை சித்தரிக்கிறது

இது 1947-க்கு வழிவகுத்த ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் காட்சிப்படுத்துகிறது

Posted On: 22 MAR 2022 11:45AM by PIB Chennai

தியாகிகள் தினத்தையொட்டி கொல்கத்தாவின் விக்டோரியா நினைவு அரங்கில் புரட்சிகர இந்தியா கலைக்கூடத்தைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மார்ச் 23 அன்று மாலை 6 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்வின் போது திரண்டிருப்போரிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்களிப்பையும், பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிரான அவர்களின் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பையும் இந்தக் கலைக்கூடம் சித்தரிக்கிறது. விடுதலை இயக்கத்தின் முக்கியமான தொகுப்புகளின் இந்த அம்சத்திற்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை. 1947-க்கு வழிவகுத்த ஒட்டு மொத்த நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதும், புரட்சியாளர்களின் முக்கியமான பங்களிப்பை எடுத்துரைப்பதும் இந்தப் புதிய கலைக்கூடத்தின் நோக்கமாகும்.

புரட்சிகர இயக்கத்திற்கு தூண்டுதலாக விளங்கிய அரசியல் மற்றும் அறிவார்ந்த பின்னணியில் இந்தப் புரட்சிகர இந்தியா கலைக்கூடம் சித்தரிக்கிறது. புரட்சிகர இயக்கத்தின் தோற்றம், புரட்சிகர தலைவர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான அமைப்புகள், இந்த இயக்கத்தின் பரவலாக்கம், இந்திய தேசிய ராணுவத்தின் உருவாக்கம், கப்பற்படை எழுச்சியின் பங்களிப்பு மற்றும் பிறவற்றை இது காட்சிப்படுத்துகிறது.

 

***



(Release ID: 1808077) Visitor Counter : 203