தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

தூர்தர்ஷன் செய்திகளை ஆஸ்திரேலியாவில் காணலாம்

Posted On: 21 MAR 2022 5:11PM by PIB Chennai

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நட்புறவை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும்ஒளிபரப்புத் துறையில் ஒத்துழைப்பை மேலும் இணைந்து செயல்படவும்இந்தியப்  பொதுத் துறை  ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதிஆஸ்திரேலிய பொதுத் துறை  ஒளிபரப்பு நிறுவனமான எஸ் பி எஸ் நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

இதன் மூலம்ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் டிடி நியூஸ்டிடி இந்தியா மற்றும் டிடி நியூஸின் பல்வேறு மொழி அலைவரிசைச்  சேவைகளையும் காண வகை செய்யப்பட்டுள்ளது.  மேலும்இரண்டு நாடுகளைச் சேர்ந்த ஒளிபரப்பு நிறுவனங்களும் நிகழ்ச்சிகளை இணைந்து தயாரிக்கவும்நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்குமான  வழிகளைகே  கண்டறிய முடியும்.

கலாச்சாரம்கல்விஅறிவியல்பொழுதுபோக்குவிளையாட்டுசெய்திகள்பயணம்இசை மற்றும் கலைத் துறைகளில் உள்ள நிகழ்ச்சிகளை பரிமாறிக் கொள்ள முடியும். தங்களது பயிற்சி மற்றும் தொழில்நுட்ப அனுபவங்களை இருநாட்டு ஒளிபரப்பாளர்களும் தெரிந்து கொள்ள முடியும். 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுச்  செயலாளர் திரு ஹர்ஷ்வர்தன் சிரிங்லாடிடி இந்தியாடிடி நியூஸ்டிடி சயாத்ரி அலைவரிசைகளுக்காக ஆஸ்திரேலிய

 தொலைக்காட்சி அலைவரிசைகளில் நாள்தோறும் நிகழ்ச்சி நேரம் ஒதுக்கப்பட்டுநிகழ்ச்சிகளும் பரிமாறிக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

                                                                                                                              *********************



(Release ID: 1807812) Visitor Counter : 188