பிரதமர் அலுவலகம்
எல்பிஎஸ்என்ஏஏ-வில் 96-வது பொது அடிப்படை வகுப்பு நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்
Posted On:
16 MAR 2022 8:55PM by PIB Chennai
லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகவியல் அகாடமியில் (எல்பிஎஸ்என்ஏஏ) 96-வது பொது அடிப்படை வகுப்பு நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி 17-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் காணொலி மூலம் உரையாற்றுகிறார். அப்போது புதிய விளையாட்டு வளாகத்தை தொடங்கிவைக்கும் பிரதமர், சீரமைக்கப்பட்ட மகிழ்ச்சி பள்ளத்தாக்கு வளாகத்தை (Happy Valley Complex) வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
எல்பிஎஸ்என்ஏஏ-வில் 96-வது அடிப்படை வகுப்பு என்பது, புதிய போதனை முறை மற்றும் படிப்பு வடிவமைப்புடன், கர்மயோகி இயக்கத்தின் கொள்கை அடிப்படையிலான முதலாவது பொது அடிப்படை வகுப்பாகும். இந்த தொகுதியில், 16 சேவைகள் மற்றும் 3 ராயல்பூட்டான் சேவைகளைச் (நிர்வாகம், காவல்துறை, வனத்துறை) சேர்ந்த பயிற்சி பெறும் அதிகாரிகள் 488 பேர் இடம் பெற்றுள்ளனர்.
***************
(Release ID: 1806971)
Visitor Counter : 184
Read this release in:
Assamese
,
Gujarati
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam