சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

“கொவிட்-19-ஐ சமாளிப்பதில் இந்தியாவின் பொது சுகாதாரத்தின் பங்கு” இணையவழி கருத்தரங்கில் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் முக்கிய உரை

Posted On: 17 MAR 2022 2:11PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றை, குறிப்பாக ஒமிக்ரான் பரவலை சமாளிப்பதில் இந்தியாவின் வல்லமை உலகிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் சேர்ந்து, “கொவிட்-19-ஐ சமாளிப்பதில் இந்தியாவின் பொது சுகாதாரத்தின் பங்கு” இணையவழி கருத்தரங்கில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்  டாக்டர் மன்சுக் மாண்டவியா முக்கிய உரை ஆற்றினார்.

“ஒமிக்ரான் பரவலை சிறப்பாக சமாளித்ததில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் உத்திகள் வலுவானவையாக இருந்தன” என்று மத்திய அமைச்சர் கூறினார். மற்ற நாடுகளில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில் இந்தியாவில் கணிசமாக குறைந்து வந்தது. சரியான நேரத்தில், பரிசோதனை தொற்று கண்டறிதல், சிகிச்சை முறை, கட்டுப்பாட்டு மையங்கள், சமுதாய கண்காணிப்பு, விதிமுறைகளை சிறப்பாக பின்பற்றுதல், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட நடவடிக்கைகளால் தொற்று வெகுவாக குறைந்தது.

மக்களின் கூட்டு முயற்சியை பாராட்டிய அவர், இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் அதன் திறனை பறைசாற்றுவதாக அமைந்தது என்று கூறினார். புவியியல் ரீதியில் பெரிய நாடாக இருந்த போதிலும், பெரும் மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள போதிலும் இந்தியா தடுப்பூசி செலுத்துவதில் உலகிற்கு முன்னோடியாக இருக்கிறது என அவர் தெரிவித்தார். இதுவரை 1.8 பில்லியன் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருப்பது  ஒரு முக்கிய சாதனை என்று அவர் குறிப்பிட்டார்.

 பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறிய அமைச்சர், உறுதியான அரசியல் வலிமை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நாம் உலகிற்கு காட்டியுள்ளோம் என்று தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மார்க் எஸ்போசிடோ, பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கிரிஸ் எலியாஸ் நித்தி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806922

***************



(Release ID: 1806943) Visitor Counter : 169