வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு பிராந்தியத்தில் விநியோக சங்கிலி மேலாண்மை அதிகரிப்பு
Posted On:
17 MAR 2022 12:03PM by PIB Chennai
வடகிழக்கு பிராந்தியத்தில் விநியோக சங்கிலி மேலாண்மை, மத்திய அரசின் முன் முயற்சி காரணமாக அதிகரித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் லாங்டிங் மாவட்டம் மியான்மர் எல்லை அருகே அமைந்துள்ளது. அங்குள்ள கிராமங்களில் மிளகாய், பூசணி, இஞ்சி, மக்காச்சோளம், சிறுதானியங்கள் உள்ளிட்டவை விளைவிக்கப்படுகின்றன. மூங்கில், வாழை மற்றும் பழவகைகளும் அங்கு பயிரிடப்படுகி்ன்றன. ஆனால் போதிய சாலை வசதி இல்லாததால், தங்களது விளைப் பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் இருந்தனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் சுயஉதவி குழுக்கள் இருந்த போதிலும் அவற்றின் உற்பத்தி பொருட்களை வெளியில் கொண்டு செல்ல இயலாத நிலையே நிலவியது. 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்த கிராமங்களைச் சேர்ந்த சுயஉதவி குழு உறுப்பினர்கள் மாவட்ட தலைமையகமான லாங்டிங்கிற்கு முதல் முறையாக சென்றனர்.
தங்களது விளைப் பொருட்களை எங்கு விற்பனை செய்வது என்ற விஷயங்களை அறிந்து கொண்ட பின்னர், சுயஉதவி குழுக்களின் தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது. அவர்களது கணக்கிடும் திறனும் அதிகரித்ததுடன் வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு பேசுவது என்ற வித்தையையும் அவர்கள் கற்றுள்ளனர்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806841
***************
(Release ID: 1806920)
Visitor Counter : 204