சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

பிரதமரின்-தக்ஷ் திட்டத்தின் பயனாளிகள்: தமிழகத்தில் பயிற்சி மற்றும் பணி பெற்றோர் விவரம்

Posted On: 16 MAR 2022 2:08PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்  பிரதிமா பவுமிக் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.  

தேசிய பட்டியல் சாதிகள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம், தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் மற்றும் தேசிய தூய்மை பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் மூலம் 2020-21 முதல் பிரதமரின் தக்ஷ் திட்டத்தை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாடு முழுவதும்  செயல்படுத்துகிறது.

2021-22-ம் ஆண்டில் தேசிய பட்டியல் சாதிகள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் 28567 பேரும், தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் 32136 பேரும் தேசிய தூய்மை பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் 10893 பேரும் என மொத்தம் 71596 நபர்கள் தங்களை பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 2021-22-ம் ஆண்டில் தேசிய பட்டியல் சாதிகள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் 505 பேரும், தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் 632 பேரும் என மொத்தம் 1137 நபர்கள் தங்களை பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.

 

 

தமிழ்நாட்டில் இருந்து 2021-22-ம் ஆண்டில் , தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் 410 பேர்  என மொத்தம் 410 நபர்கள் தங்கள் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 2021-22-ம் ஆண்டில் , தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் 25 பேர்  என 25 நபர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806510

 

******



(Release ID: 1806685) Visitor Counter : 181