சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பேறுகால (பிரசவ கால) இறப்பு விகிதத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் குழந்தை பிறப்புக்கு 70 பேர் என்ற நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டும் நிலையில் இந்தியா உள்ளது நீடித்த இலக்கை ஏற்கனவே எட்டிய தமிழகம்

Posted On: 14 MAR 2022 2:42PM by PIB Chennai

இந்திய  தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள பேறுகால இறப்பு விகிதம் குறித்த சிறப்பு செய்திக் குறிப்பின்படி,  குறிப்பிடத்தக்க சாதனையாக, இந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் 10 புள்ளிகள் குறைந்துள்ளது.

2016-18-ல் 113-ஆக இருந்த இந்த விகிதம் 2017-19-ல் 103 (8.8% வீழ்ச்சி) ஆக குறைந்துள்ளது. 

பேறுகால இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் முன்னேற்றகரமான முறையில், 2014-16-ல் 130, 2015-17-ல் 122, 2016-18-ல் 113 மற்றும் 2017-19-ல் 103 என குறைந்து வருகிறது.

கேரளா, மகாராஷ்ட்ரா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவாக 15 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அத்துடன் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, குஜராத் மற்றும் ஜார்க்கண்ட்ஆகிய 7 மாநிலங்கள் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை ஏற்கனவே எட்டிவிட்டன. குறிப்பாக தமிழ்நாட்டில், பேறுகால இறப்பு விகிதம், ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 58 என்ற அளவில் குறைந்துள்ளது. 

பி்ரசவகால இறப்பு விகிதங்களைக் குறைக்க ஏற்கனவே, பிரதமரின் பேறுகால பாதுகாப்புத் திட்டம், பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம், ரத்த சோகை இல்லாத இந்தியா, ஜனனி சுரக்சா யோஜனா, ஊட்டச்சத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805731

-----


(Release ID: 1805865) Visitor Counter : 672