ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மத்திய ஊரக வளர்ச்சித்துறை தனது சுதந்திரப் பெருவிழாவை ‘புதிய இந்தியாவின் பெண்கள்’ என்ற தலைப்பிலான சிறப்பு வாரக் கொண்டாட்டத்துடன் நிறைவு செய்தது
Posted On:
14 MAR 2022 10:55AM by PIB Chennai
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், சுதந்திரப் பெருவிழா 7-13 மார்ச் 2022 வரை, சர்வதேச மகளிர் தின வாரத்தின்போது, ‘புதிய இந்தியாவின் பெண்கள்’ என்ற தலைப்பிலான சிறப்பு வாரமாகக் கொண்டாட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள கிராமப்புற பெண்களின் பங்களிப்பை போற்றும் விதமாக, இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் மகளிர் சார்ந்த 18 தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தீன்தயாள் உபாத்யாயா – கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தீன்தயாள் அந்தியோதயா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் – கிராமப்புறம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் ரூர்பன் ஆகிய திட்டங்களின் கீழ் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
கொண்டாட்டத்தின் முக்கிய நாளான மகளிர் தினமான 8 மார்ச் அன்று தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், பெண்களின் தொழில்முனைவுத் திறனைப் போற்றும் விதமாக தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், இணை அமைச்சர்கள் சாத்வி நிரஞ்சன் ஜோதி, திரு ஃபகன் சிங் குலாஸ்தே, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் திரு நாகேந்திர நாத் சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிறைவு நாளான 13-ம் தேதி, சுயஉதவிக்குழு பெண்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அவர்களைப் பாராட்டும் விதமாக, மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கு / நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805638
-------
(Release ID: 1805753)
Visitor Counter : 312