எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021-22 நிதியாண்டிற்கான இடைக்கால ஈவுத்தொகையாக ரூ 933.61 கோடியை இந்திய அரசுக்கு என்எச்பிசி வழங்கியது

Posted On: 11 MAR 2022 10:40AM by PIB Chennai

இந்தியாவின் முதன்மையான நீர்மின் நிறுவனமும், இந்திய அரசின் ‘மினி ரத்னா’ வகை-I நிறுவனமுமான என்எச்பிசி லிமிடெட், 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகையாக ரூ 933.61 கோடியை மார்ச் 4, 2022 அன்று இந்திய அரசுக்கு வழங்கியது.

மேற்கண்ட தொகைக்கான வங்கி ஆவணத்தை மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங்கிடம் என்எச்பிசி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ஏ கே சிங் மார்ச் 10, 2022 அன்று வழங்கினர். இந்திய அரசின் செயலாளர் (மின்சாரம்) திரு அலோக் குமார், திரு ஒய் கே சௌபே, இயக்குநர் (தொழில்நுட்பம்) என்எச்பிசி, திரு ஆர் பி கோயல், இயக்குநர் (நிதி), திரு கே கே கோயல், செயல் இயக்குநர் (நிதி) மற்றும் திரு சஞ்சய் குமார் மதன், செயல் இயக்குநர் (நிதி) ஆகியோர் உடனிருந்தனர்.

2020-21 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையின் அடிப்படையில் நடப்பு 2021-22 நிதியாண்டில் இந்திய அரசுக்கு ரூ 249.44 கோடியை நிறுவனம் ஏற்கனவே வழங்கியுள்ளது. மொத்த ஈவுத்தொகையாக 2021-22 நிதியாண்டில் இந்திய அரசுக்கு ரூ 1183.05 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நிதி ஆண்டு ‘22 உடன் நிறைவடைந்த ஒன்பது மாதங்களில் ரூ 2977.62  கோடி நிகர லாபத்தை நிறுவனம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ 2829.16 கோடியாக இது இருந்தது. 2020-21 நிதி ஆண்டில் ரூ 3233.37 கோடி நிகர லாபத்தை நிறுவனம் ஈட்டியது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804974  


(Release ID: 1805107) Visitor Counter : 162