நிலக்கரி அமைச்சகம்
சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவைக் குறிக்கும் வகையில் நிலக்கரி அமைச்சகத்தின் வார விழா பல்வேறு நிகழ்சகளுடன் இன்று நிறைவடைகிறது
Posted On:
11 MAR 2022 12:21PM by PIB Chennai
சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாரவிழாக் கொண்டாட்டங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இன்று நிறைவடைகின்றன.
“நிகர பூஜ்ஜிய எதிர்காலத்தின் கீழ் இந்தியாவின் ஆற்றல் ஆதாரங்களின் எதிர்காலம்” என்ற தலைப்பில் டாக்டர் வைபவ் சதுர்வேதி ஆற்றிய உரை : “நிலக்கரி மற்றும் பருவநிலை மாற்றம் – இந்தியக் கண்ணோட்டம்” என்ற தலைப்பில் அமைச்சகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கான அறிவிப்புப் போட்டி போன்றவை நிறைவு நாள் நிகழ்ச்சிகளின் சில சிறப்பம்சங்கள். நிறைவு நாள் நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு, நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். அனில் குமார் ஜெயின் பரிசுகள் வழங்கி உரையாற்றுகிறார்.
2022-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி, டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில், நிலக்கரி, சுரங்கம் மற்றும் இரயில்வேத் துறை இணையமைச்சர் திரு ராவ்சாஹேப் பாட்டீல் தன்வே, ஒரு வாரக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார். கோல் இந்தியா நிறுவனம் மற்றும் என்எல்சி இந்தியா லிமிடெட் ஆகியவற்றின் நிலையான சுரங்கச் செயல்பாடுகள் குறித்த குறும்படங்கள், நிலக்கரி மற்றும் அதனுடன் தொடர்புடைய, துறை சார்ந்த நிபுணர்களின் பேச்சுக்கள், இரத்த தான முகாம்கள் போன்றவை நிலக்கரி அமைச்சகத்தின் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவைக் குறிக்கும் ஒரு வாரக் கொண்டாட்டங்களின் சில சிறப்பம்சங்கள்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805005
(Release ID: 1805077)
Visitor Counter : 248