குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

எம்எஸ்எம்ஈ சாம்பியன்ஸ் திட்டத்தின் கீழ் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான புதுமைகள் திட்டத்தை திரு நாராயண் ராணே தொடங்கி வைத்தார்

Posted On: 10 MAR 2022 3:14PM by PIB Chennai

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான புதுமைகள் (வழிகாட்டுதல், வடிவமைப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமை) திட்டத்தையும் எம்எஸ்எம்ஈ ஐடியா ஹேக்கத்தானையும் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு நாராயண் ராணே இன்று தொடங்கி வைத்தார்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தற்சார்பு இந்தியாவுக்கு பங்காற்றுவதாக நிகழ்ச்சியில் பேசுகையில்யில் தெரிவித்த அவர், தொழில்முனைவோர் புதிய நிறுவனங்களை உருவாக்க மேற்கண்ட திட்டங்கள் உதவும் என்றார்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் திரு பானு பிரதாப் வர்மா பேசுகையில், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் படைப்புத்திறனை ஊக்குவித்து ஆதரிக்க எம்எஸ்எம்ஈ புதுமைகள் திட்டம் உதவும் என்றார்.

புதுமை நடவடிக்கைகள் மையமாக எம்எஸ்எம்ஈ புதுமைகள் திட்டம் விளங்கும் என்றும், சிந்தனைகள் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகச் செயலாளர் திரு பி பி ஸ்வைன் கூறினார்.

மூன்று துணைப் பிரிவுகள் மற்றும் இடையீடுகளை ஒரே நோக்கத்துடன் ஒருங்கிணைக்கவும் ஒன்றிணைக்கவுமான முழுமையான அணுகுமுறையாக இத்திட்டம் அமைந்துள்ளது. புதுமைகள் குறித்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடையே விழிப்புணர்வை உருவாக்கி, எம்எஸ்எம்ஈ சாம்பியன்களாக ஆவதற்கு அவர்களை ஊக்குவிக்கிறது இத்திட்டம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804723  

***************



(Release ID: 1804784) Visitor Counter : 226