தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

வெற்றி ஊர்வலங்கள் தொடர்பான விதிமுறைகள்

प्रविष्टि तिथि: 10 MAR 2022 12:45PM by PIB Chennai

கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் 2022-ம் ஆண்டு ஜனவரி
8-ந் தேதி அறிவித்தது.  தேர்தல் தொடர்பான அறிவிப்புகளுடன், கொவிட் பெருந்தொற்று காலத்தில் வெற்றி ஊர்வலங்கள் உள்ளிட்ட தேர்தல்களின் பல்வேறு அம்சங்களை முறைப்படுத்து வதற்கான, மாற்றியமைக்கப்பட்ட விரிவான விதிமுறைகளையும், தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  தேர்தல் காலத்தில் கொவிட் தொற்று நிலைமை முன்னேற்றமடைந்ததால், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் படிப்படியாக தளர்த்தியது.

 தேர்தல் நடந்த மாநிலங்களில்  கொவிட் பெருந்தொற்றின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, வாக்கு எண்ணிக்கையின் போதும், அதற்கு பின்னரும் வெற்றி ஊர்வலங்கள் தொடர்பான விதிமுறைகளை தளர்த்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.  வெற்றி ஊர்வலங்கள் மீதான முழுமையான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது.  இருப்பினும் மாவட்ட அதிகாரிகள் விதித்துள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளை பொருத்தே இந்த தளர்வு அமையும் என்று ஆணையம் கூறியுள்ளது.

***************


(रिलीज़ आईडी: 1804758) आगंतुक पटल : 286
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu