எஃகுத்துறை அமைச்சகம்
பட்டை தீட்டாத வைரங்கள் ஏலத்தில் என்எம்டிசி பிரகாசிக்கிறது
प्रविष्टि तिथि:
10 MAR 2022 12:02PM by PIB Chennai
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா வைரச் சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட பட்டை தீட்டப்படாத வைரங்களின் விற்பனைக்கு மின்னணு முறையிலான ஏலத்தை மத்திய எஃகு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான தேசிய தாதுப் பொருள் மேம்பாட்டுக் கழகம் நடத்தியது. இந்த ஏலத்திற்கு சூரத், மும்பை, பன்னா ஆகியவற்றின் வைர வியாபாரிகளிடம் நல்ல வரவேற்பு இருந்தது. 2020 டிசம்பருக்கு முன்பு 8,337 கேரட் பட்டை தீட்டப்படாத வைரங்கள் எடுக்கப்பட்டன. இவற்றுக்கு 100 சதவீதம் ஏல ஒப்பந்தங்கள் பெறப்பட்டன.
“60 ஆண்டுகளுக்கு மேலாக சுரங்கத் துறையில் செயல்பட்டு வரும் என் எம் டி சி, புதிய தொழில்நுட்பம் மற்றும் இணையில்லாத அனுபவம் காரணமாக, சுற்றுச் சூழல் பாதுகாப்பையும் சுரங்கங்களை சுற்றியுள்ள மக்களையும் பாதுகாக்கிறது. இதனால், உற்பத்தித் திறனும் விரிவடைகிறது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள பன்னா சுரங்கம் நாட்டின் மொத்த வைரத்தில் 90 சதவீதத்தைத் தருகிறது” என்று என் எம் டி சி தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு சுமித் தேவ் தெரிவித்தார்.
***************
(रिलीज़ आईडी: 1804756)
आगंतुक पटल : 291