ஊரக வளர்ச்சி அமைச்சகம்

சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவின் ஒருவார கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தீன்தயாள் உபாத்யாயா ஊரக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் நாடுமுழுவதும் பெண்களை மையப்படுத்திய 174 முகாம்கள் நடத்தப்பட்டன

Posted On: 10 MAR 2022 11:40AM by PIB Chennai

சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவின் ஒருவார கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தீன்தயாள் உபாத்யாயா ஊரக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ்  ஊரக மேம்பாட்டுத் துறை மூலம் சர்வதேச மகளிர் தினத்தைக் குறிக்கும் வகையில் 2022 மார்ச் 7 அன்று நாடுமுழுவதும் பெண்களை மையப்படுத்திய 174 முகாம்கள் நடத்தப்பட்டன.

பல்வேறு மாநில ஊரக வாழ்வாதார இயக்கங்கள், மாநில திறன் மேம்பாட்டு இயக்கங்கள், திட்ட அமலாக்க முகமைகள் ஆகியவற்றின் மூலம் வேலைவாய்ப்பு சுதந்திரம் என்ற பொருத்தமான தலைப்பிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

இந்த முகாம்களில் 4,281 பெண்கள் வெற்றிகரமாக ஒன்று திரட்டப்பட்டு அழகுபடுத்துதல் உதவியாளர்,  சுயவேலை செய்வதற்கான தையல் பயிற்சி போன்ற வகுப்புகளில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804675

***************



(Release ID: 1804692) Visitor Counter : 266