இந்திய போட்டிகள் ஆணையம்
ப்ரியோன் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்தை அமேசான் ஆசியா பசிபிக் ரிசோசஸ் நிறுவனம் கையகப்படுத்த சிசிஐ ஒப்புதல்
प्रविष्टि तिथि:
10 MAR 2022 11:14AM by PIB Chennai
ப்ரியோன் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்தை அமேசான் ஆசியா பசிபிக் ரிசோசஸ் நிறுவனம் கையகப்படுத்த சிசிஐ எனப்படும் இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ப்ரியோன் நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை அமேசான் ஆசியா பசிபிக் நிறுவனம் வாங்குகிறது. அமேசான் ஆசியா பசிபிக் ரிசோசஸ் நிறுவனம், அமேசான் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
ப்ரியோன் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனம், இந்தியருக்கு சொந்தமானதாகும். அது ஹோபர் மல்லோ டிரஸ்டின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ஹோபர் மல்லோ வைத்திருந்த 76 சதவீத பங்குகளை தற்போது அமேசான் வாங்க உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804667
***************
(रिलीज़ आईडी: 1804680)
आगंतुक पटल : 256