மத்திய அமைச்சரவை

உபரி நிலங்களைப் பணமாக்குவதற்காக சிறப்பு ஏற்பாடாக தேசிய நில பணமாக்கல் கழகத்தை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 09 MAR 2022 1:31PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில்  நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உபரி நிலங்களைப் பணமாக்குவதற்காக சிறப்பு ஏற்பாடாக, முற்றிலும் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக தேசிய நில பணமாக்கல் கழகத்தை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட தொடக்க பங்கு மூலதனமாக ரூ.5,000 கோடியும், பெறப்படும் தொகையிலிருந்து ரூ.150 கோடி பங்கு மூலதனத்தையும் கொண்டதாக இருக்கும். மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்குச் சொந்தமான உபரி நிலம் மற்றும் கட்டட சொத்துக்களை பணமாக்கும் பணியை இந்தக் கழகம் மேற்கொள்ளும்.

2021-22 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

பயன்படுத்தப்படாத மற்றும் குறைவான பயன்பாடு கொண்ட முக்கியமற்ற சொத்துக்களை பணமாக்குவதன் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்.

மத்திய நிதியமைச்சகத்தின் பொது நிறுவனங்கள் துறை இந்தக் கழகத்தை உருவாக்கி, அதன் நிர்வாகம் அமைச்சகமாகவும், செயல்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804286

 

***************



(Release ID: 1804394) Visitor Counter : 272