பாதுகாப்பு அமைச்சகம்
4 நாள் இந்தோ-பசிபிக் ராணுவ சுகாதாரக் கருத்தரங்கு: பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
Posted On:
07 MAR 2022 1:36PM by PIB Chennai
நான்கு நாட்கள் நடைபெறும் இந்தோ-பசிபிக் ராணுவ சுகாதாரக் கருத்தரங்கைப் (IPMHE) , பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (மார்ச் 7ம் தேதி) காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்த கருத்தரங்கைப் பாதுகாப்புப் படைகள் மருத்து சேவைகள் பிரிவு (AFMS) மற்றும் அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டுப்பாட்டு மையம் (USINDOPACOM) ஆகியவை இணைந்து நடத்துகிறது.
‘‘கொந்தளிப்பான, நிச்சமற்ற, சிக்கலான உலகில் ராணுவ மருத்துவ நலன்’ என்பதுதான் இந்த மாநாட்டின் கருப்பொருள். மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கருத்தரங்கு, ராணுவ மருத்துவப் பிரிவுகள் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. போர்க் கள மருத்துவப் பராமரிப்பு, மருந்துகள், போர்க் கள அறுவை சிகிச்சை, மயக்க மருந்து, விமானம் மற்றும் கடல்சார் மருத்துவ அவசர நிலை உட்பட பல விஷயங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளன.
இந்தக் கருத்தரங்கில், 38-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு பிரதிகள் கலந்து கொள்கின்றனர். இந்த 4 நாள் கருத்தரங்கில் 110 தலைப்புகளில் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
எந்த ராணுவத்துக்கும் மருத்துவச் சேவைகள் பிரிவு முக்கியமான அம்சம். போர் தொடர்பான பணிகளுக்கு அடுத்த படியாக இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது, மிகவும் மதிப்பு மிக்க பணிகளில் தயார் நிலையில் உள்ள ராணுவ மருத்துவச் சேவைப் பிரிவு ஈடுபடுகிறது. பணியில் இருக்கும் வீரர்கள், அவர்கள் குடும்பத்தினர், முன்னாள் ராணுவத்தினருக்கு அனைத்து விதமான மருத்துவச் சேவைகளையும் பாதுகாப்புப் படைகளின் மருத்து சேவை பிரிவு அளிப்பது பாராட்டுக்குரியது. கோவிட்-19 பெருந்தொற்றின் போது, பாதுகாப்புப் படைகள் மருத்துவச் சேவைப் பிரிவு, அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கது. மருத்துவப் பொருட்கள் மற்றும் தடுப்பூசி விநியோகத்தில் ஏற்பட்ட தடைகளைப் போக்குவதில், கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. பேரிடர்கள் சமயத்திலும் பாதுகாப்புப் படைகள் வான்வழியாகவும், கடல் வழியாகவும் தேவையான உதவிகளை செய்தன. இவைபெயல்லாம் நவீன கால, பகிர்தல் முறைகள் மூலம் சாத்தியமானது. இந்தக் கூட்டு அனுபவம் எதிர்காலத்திலும் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. சிங்கப்பூரில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஷாங்கிரி லா பேச்சுவார்த்தையின்போது, இந்தோ-பசிபிக் பகுதி தடையற்ற திறந்தவெளிப் பகுதி எனவும், இதன் மூலம் அனைவருக்கும் முன்னேற்றம், செழிப்பு ஏற்படும் எனவும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
இந்தோ-பிசிபிக் கொள்கை உலகம் ஒரு குடும்பம் என்ற உணர்வைப் பிரதிபலிக்கிறது. உலகளவில் மிகவும் உயர்ந்ததாக கருதப்படும் மருத்துவப் பணியாளர்களின் பங்களிப்பால், ஏற்படும் இந்த உணர்வு மிக சிறந்த உதாரணம்.
இவ்வாறு திரு. ராஜ்நாத் சிங் பேசினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803525
***************
(Release ID: 1803708)
Visitor Counter : 234