வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலான மத்திய அரசின் நடவடிக்கை பயனளிக்கிறது
प्रविष्टि तिथि:
07 MAR 2022 3:04PM by PIB Chennai
கொவிட் பெருந்தொற்று காலத்தில் சரக்குகளை அனுப்புவதில் ஏற்பட்ட சவால்களுக்கு இடையே இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி முந்தைய நிதியாண்டின் முதல் பத்து மாதங்களைவிட நடப்பு நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் 23 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது (ஏப்ரல்-ஜனவரி, 2021-22).
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் கீழ், பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு 2020-21 ஏப்ரல், ஜனவரி மாதங்களில் 15,974 மில்லியன் அமெரிக்கன் டாலராக இருந்தது. இது தற்போது 19,709 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
2021-22-ல் 23,713 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற இலக்கினை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.
2021-22 ஏப்ரல்–ஜனவரி மாதங்களில் அந்நியச் செலாவணியை ஈட்டியதில் அரிசி ஏற்றுமதி முதலிடம் வகிக்கிறது. இது 7,696 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத் தந்துள்ளது.
2020-21 இதே காலகட்டத்தில் அரிசி ஏற்றுமதி மூலம் 6,793 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அந்நியச் செலாவணி கிடைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803561
----
(रिलीज़ आईडी: 1803665)
आगंतुक पटल : 281