மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

பெங்களூருவில் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தியா உலக அமைப்பின் கூட்டத்தில் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொள்கிறார்

Posted On: 06 MAR 2022 1:10PM by PIB Chennai

பெங்களூருவில் 7,8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தியா உலக அமைப்பின் (ஐஜிஎஃப்)கூட்டத்தில் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்  துறை இணையமைச்சர் திரு. ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொள்கிறார். ஐஜிஎஃப்-பின் முந்தைய கூட்டங்கள் துபாய் மற்றும் பிரிட்டனில் நடைபெற்றன. இதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, வேல்ஸ்  இளவரசர், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் , உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர். டெட்ரஸ் அதானோம், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திரு. ராஜீவ் சந்திரசேகர்   7-ம்தேதி மாலை 5.00 மணியளவில் புதிய இந்தியா தொழில் எனும் அமர்வில் கலந்து கொள்கிறார். 8-ம்தேதி காலை 8.30 மணியளவில் யுனிகார்ன்களுடன் வட்டமேஜை கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடுவார். கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற அமர்விலும் திரு. ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார்.

பெங்களூரு கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி. மீனாட்சி லேகி உள்ளிட்டோரும் கலந்து கொள்வார்கள். மேலும், தொழில்துறையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள், நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் இதில் பங்கேற்கின்றனர்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803314

******



(Release ID: 1803347) Visitor Counter : 212