ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
மக்கள் மருந்தக பொது மருந்துகளின் பலன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வாகனங்களை இணை அமைச்சர் திரு. பகவந்த் குபா கொடியசைத்து துவக்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
02 MAR 2022 5:32PM by PIB Chennai
மக்கள் மருந்தக பொது மருந்துகளின் பலன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மக்கள் மருந்தக ரதம், மக்கள் மருந்தக வேன்கள் மற்றும் மக்கள் மருந்தக மின்சார ரிக்ஷாக்கள் உள்ளிட்டவற்றை மத்திய ரசாயனம், உரங்கள், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர் திரு .பகவந்த் குபா புதுதில்லியில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஒரு வார கால கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இந்த வாகனங்கள் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும். மக்கள் மருந்தக ரதம் ஏழு நாட்களில் 4 முதல் 5 மாநிலங்களை சென்றடைய உள்ள நிலையில், மார்ச் 7-ம் தேதி வரை தில்லி முழுவதும் மின்சார ரிக்ஷாக்கள் பயணிக்கும்.
மக்கள் மருந்தகம் திட்டத்தின் பயன்கள் குறித்தும் குறைந்த விலையில் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கக்கூடிய பொது மருந்துகள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை இந்த வாகனங்கள் உருவாக்கும்.
மக்கள் மருந்தகம் தின கொண்டாட்டங்களின் இரண்டாம் நாளன்று நாடு முழுவதும் உள்ள 75 இடங்களில் மகளிர் சக்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெண்களை கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பொது மக்கள் மருந்தகத்தில் கிடைக்கக்கூடிய பல்வேறு பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகம் விநியோகிக்கப்பட்டது.
பெண் தலைவர்கள், மாநகராட்சி மேயர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த சிறப்பு வாய்ந்த பெண்மணிகள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை குறிக்கும் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் நடத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802352
************
(रिलीज़ आईडी: 1802444)
आगंतुक पटल : 260