தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சுமித்ரா பாவே, சுனில் சுக்தான்கர் இரட்டை இயக்குனர்களின் ஏராளமான திரைப்படங்கள் என்எப்ஏஐ-ல் குவிந்துள்ளன
प्रविष्टि तिथि:
01 MAR 2022 2:37PM by PIB Chennai
பிரபல இரட்டை இயக்குனர்களான சுமித்ரா பாவே, சுனில் சுக்தான்கர் ஆகியோர் இயக்கிய பல திரைப்படங்கள் இந்திய தேசிய திரைப்பட கருவூலத்தில் (என்எப்ஏஐ) குவிந்துள்ளன. இந்த திரைப்படங்களை திரு சுனில் சுத்தான்கர் மற்றும் சின்மேதாம்லே ஆகியோர் என்எப்ஏஐ-ன் இயக்குனர் பிரகாஷ் மக்தும் இடம் வழங்கினர். இரட்டை இயக்குனர்கள் பல ஆண்டுகளாக ஏராளமான திரைப்படங்களை இயக்கி இந்தியாவிலும், உலகளவிலும் புகழ்பெற்றனர். பாவே கடந்த ஆண்டு காலமானார்.
இன்று ஒப்படைக்கப்பட்ட 35 எம்எம் திரைப்பட பிரதிகளில், தகாவி ஃபா (2002), பதா (2006), ஹ பாரத் மஜா (2012) ஆகியவையும், 16 எம்எம் பிரதிகளாக, ஜிந்தகி ஜிந்தாபாத் (1997), பாய் குறும்படம் (1985), பானி (1987), லஹா (1994) ஆகியவையும் அடங்கும்.
என்எப்ஏஐ-க்கு நன்றி தெரிவித்த சுனில் சுக்தான்கர், “என்எப்ஏஐ எங்களது திரைப்பட பயணத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த திரைப்படங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவற்றை புதிய தலைமுறையினர் எளிதில் அணுகும் வகையில் டிஜிட்டல் மயமாக்க வேண்டும்” என்று கேட்டு கொண்டார்.
தேசிய விருது பெற்ற இரட்டை இயக்குனர்களின் பல திரைப்படங்களை பாதுகாத்து வைப்பது தொடர்பாக கடந்த ஆண்டு சுமித்ரா பாவேயுடன் பேசியதாகவும், துரதிர்ஷ்டவசமாக அவர் காலமாகிவிட்டதாகவும் என்எப்ஏஐ-ன் இயக்குனர் பிரகாஷ் மக்தும் கூறினார்.
இரட்டை இயக்குனர்கள் மராத்தி திரைப்பட உலகிற்கு பல்வேறு திரைப்படங்களை இயக்கி தொண்டாற்றியுள்ளனர். 2014-15-ம் ஆண்டில் இந்த இயக்குனர்கள் சில திரைப்படங்களை என்எப்ஏஐ-யிடம் ஒப்படைத்தனர். சுமித்ரா பாவே தனது 75-வது பிறந்த நாளன்று தான் கைப்பட எழுதிய 10 திரைப்படங்களின் திரைக்கதைகளை என்எப்ஏஐ-யிடம் வழங்கினார்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802065
***************
(रिलीज़ आईडी: 1802138)
आगंतुक पटल : 246