மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு, அரசின் செயல்திறன்மிக்க கொள்கைகள், தொழில்முனைவோர் இயங்குவதற்கான சூழல் ஆகியவை இந்தியாவில் விஎல்எஸ்ஐ & செமி கண்டக்டர் சூழல் வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களாகும்

Posted On: 01 MAR 2022 12:43PM by PIB Chennai

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மற்றும் செயல்படுத்துவதற்கான அபரிமிதமான சந்தையை இந்தியா தற்போது கொண்டுள்ளது. புதுமைக்கான சுற்றுச்சூழலின் அற்புதமான செயல்திறன், திறமையான தொழில்முனைவோர்களுக்கான அருமையான சூழல், அரசின் கொள்கை மற்றும் முதலீடு ஆகியவை மேற்கூறிய 2 அம்சங்களையும் ஊக்குவிப்பதுடன் உலகின் தேவைக்கேற்ப வரும் 10 ஆண்டுகளில் நீடித்த சூழலை உருவாக்குவது இந்தியாவுக்கு அவசியமான ஒன்றாகும்என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.  இந்திய தொழில்துறை பங்குதாரர்களுடன் இணைந்து இந்திய விஎல்எஸ்ஐ சொசைட்டியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 35-வது சர்வதேச விஎல்எஸ்ஐ வடிவமைப்பு மற்றும் செயல்முறை மாநாடு 2022-ல் அவர் உரையாற்றினார். இந்த ஆண்டுக்கான மாநாட்டின் கருப்பொருள் சிலிக்கான் கேடலைசிங் கம்ப்யூட்டிங், கம்யூனிகேஷன் & காக்னிட்டிவ் கன்வெர்ஜென்ஸ் என்பதாகும்.

வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்துறை விரிவாக்கத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா முன்னணி வகிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு குறித்து குறிப்பிட்ட திரு ராஜீவ் சந்திரசேகர், 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி பிரதமர் நம் அனைவருக்கும் ஒரு தொலைநோக்கை அறிவித்தார் என்று கூறினார். அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவின் டெக்கேட் எனப்படும் தொழில்நுட்பத்துறை மேம்பாட்டை அவர் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

 கொவிட் பெருந்தொற்று காலத்தில் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்ய முயற்சி மேற்கொண்டதாக அவர் கூறினார். பெருந்தொற்றுக்கு பின்னர் நரேந்திர மோடி அரசின் கொள்கைகள் மின்னணு முறை வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாக அமைச்சர் கூறினார்.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802039

 

***************



(Release ID: 1802119) Visitor Counter : 220