மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி’ என்ற தலைப்பிலான பட்ஜெட்டிற்கு பிந்தைய இணையவழிக்கருத்தரங்கில் மத்திய மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பங்கேற்கிறது தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்
Posted On:
01 MAR 2022 12:12PM by PIB Chennai
மத்திய பட்ஜெட் 2022-ல் நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளை திறம்பட நடைமுறைப்படுத்த பல்வேறு துறைகளுக்கும் உதவும் விதமாக மத்திய அரசு தொடர் இணையவழிக் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. இந்த இணையக் கருத்தரங்கில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் ஒரே மேடையில் பங்கேற்று பல்வேறு துறைகளிலும் பட்ஜெட்டை நடைமுறைப்படுத்துவதற்கான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், அறிவியல் சார்ந்த மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து ‘தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி’ என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கிற்கு மார்ச் 2, 2022 அன்று ஏற்பாடு செய்துள்ளது. இந்த இணையக் கருத்தரங்கின் தொடக்க அமர்வில், பிரதமர் உரையாற்ற உள்ளார். இரண்டாவது பகுதியில் நான்கு தனித்தனி தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற உள்ளன.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை (MeitY), தொலைத்தொடர்புத்துறை (DOT), அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித்துறை (DSIR), மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (DST) ஆகியவற்றின் சார்பில் நான்கு அமர்வுகள் நடைபெற உள்ளன.
‘நீடித்த வளர்ச்சிக்கு புதிய தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. 3-வது அமர்வில் அந்தந்த துறைகளின் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802033
------
(Release ID: 1802093)
Visitor Counter : 217