குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய மதிப்பு சார்ந்த கல்வி முறையை உருவாக்க குடியரசு துணைத்தலைவர் அழைப்பு
Posted On:
01 MAR 2022 12:55PM by PIB Chennai
இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய மதிப்பு சார்ந்த கல்வியை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். ‘கல்விமுறை பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை பெறுவதற்கானதாக மட்டுமின்றி அதிகாரமளித்தல், அறிவூட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடியதாக’ இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், பண்டைக்காலத்தில் இருந்ததைப் போல குடிமக்களுக்கு சமூக விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய ஒரு இயக்கமாக கல்வி மற்றும் மருத்துவ சேவைகளைக் கருத வேண்டும் என்றார்.
மேலும், சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பெருமளவு நன்மை பயக்கக் கூடியதாக கல்வி இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் ஒவ்வொருவரும் தங்களை மட்டுமே நேசிப்பவராக இருந்தால் உங்களை யாரும் நினைவுகூர மாட்டார்கள். அதே வேளையில் நீங்கள் மற்றவர்களுக்காக வாழ்பவராக இருந்தால், நீங்கள் என்றும் நினைவுகூரப்படுவீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முழுமையான கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், உடற்பயிற்சி மற்றும் தோட்டப் பராமரிப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவித்தார். குறிப்பாக தாய்மொழியில் கல்வி கற்பிக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பிறமொழிகளைக் கற்கும் அதே வேளையில் தாய்மொழியில் புலமைப் பெற்றிருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
பின்னர் குண்டூரில் உள்ள அன்னமய்யா நூலகத்தையும் அவர் பார்வையிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802044
------
(Release ID: 1802089)
Visitor Counter : 215