இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்

மத்திய பட்ஜெட் 2022-ல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார்

Posted On: 28 FEB 2022 10:51AM by PIB Chennai

மத்திய பட்ஜெட் 2022-ல் நிதியமைச்சரால் செய்யப்பட்ட அறிவிப்புகளின் தீவிர அமலாக்கம் பற்றி விளக்குவதற்கு தொடர்ச்சியாக பல்வேறு துறைகள் குறித்து இணையவழி கருத்தரங்கிற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு துறைகளில் அமலாக்க உத்திகளுக்கு ஆலோசனைகள் வழங்க இந்தத் தொடர் கருத்தரங்கு ஒரே தளத்திற்கு அரசு மற்றும் தனியார் துறைகள், கல்வித்துறை, தொழில்த்துறை ஆகியவற்றைச் சார்ந்த நிபுணர்களைக் கொண்டுவருகிறது.

 “தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிஎன்ற பொருளில் 2022 மார்ச் 2 அன்று மத்திய அரசின் பல்வேறு அறிவியல் சார்ந்த அமைச்சகங்கள், துறைகளுடன் இணைந்து முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், இணையவழி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கருத்தரங்கின் தொடக்க அமர்வு பிரதமரின் உரையுடன் தொடங்கும்.

 இதைத் தொடர்ந்து நான்கு பொருள்களில் வெவ்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் உரையாற்றுவார்கள். நிறைவாக, இந்த அமர்வுகளில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை அமலாக்கத்திற்கு ஏற்ப அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் அமைச்சர்களும், செயலாளர்களும் விவாதிப்பார்கள்.

கருத்தரங்கின் முழு விவரங்களை அறிவதற்கான இணையதளம் https://events.negd.in/(Release ID: 1801785) Visitor Counter : 195