ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக பெரியளவிலான தொழில்-கல்வி கூட்டுகளை வலுப்படுத்த டாக்டர். மன்சுக் மாண்டவியா அழைப்பு

Posted On: 25 FEB 2022 3:48PM by PIB Chennai

தொழில் இணைப்பு 2022”:  தொழில்துறை மற்றும் கல்வித்துறை கூட்டு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை மத்திய சுகாதாரம், குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். ரசாயனம், உரங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர் திரு. பக்வந்த் குபா முன்னிலை வகித்தார்.                            நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். மன்சுக் மாண்டவியா, நாட்டில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக பெரியளவிலான தொழில்-கல்வித்துறை கூட்டுகளை வலுப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில், கொவிட்-19 பெருந்தொற்றை இந்தியா திறம்பட எதிர்கொண்டது என்று திரு. மாண்டவியா கூறினார். தடுப்பூசி ஆராய்ச்சியில் மற்ற முன்னேறிய நாடுகளுடன் இந்தியா தோளோடு தோள் சேர்ந்து நடப்பதை உறுதி செய்த அறிவியல் மற்றும் மருத்துவ சமூகத்திற்கு பிரதமர் அனைத்து ஆதரவையும் வழங்கினார் என்று  அவர் மேலும் கூறினார்.

தேசத்தின் முன்னேற்றத்திற்காக புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் கற்றலுக்கு ஊக்கமளிக்கும் தொழில்துறை-கல்வித்துறை கூட்டை அவர் வலியுறுத்தினார்.

புதுமைக்கான ஆர்வமும், தரமான தயாரிப்புகளை அதிகளவில் உற்பத்தி செய்வதும், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்’ (உலகத்திற்காக இந்தியாவில்  உற்பத்தி செய்தல்) என்ற திட்டத்தை நனவாக்க உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.

சிறந்த தரம் வாய்ந்த இந்திய தயாரிப்புகள் தற்சார்பு இந்தியா மற்றும் பொருளாதார செழுமைக்கு பங்களிக்கும் என்று அவர் மேலும் கூறினார். இந்த இலக்கை அடைவதற்கான வரைபடத்தை உருவாக்குவது குறித்து இந்த கருத்தரங்கு விவாதிக்கும் என்று டாக்டர். மன்சுக் . மாண்டவியா நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801080

                                ************


(Release ID: 1801149) Visitor Counter : 198