வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பட்ஜெட்டுக்கு பிந்தைய அறிவிப்புகள் குறித்த ‘குடிமக்களில் ஒருவரைக் கூட பின்தங்க விடாமல் இருப்பது’ எனும் கருத்தரங்கில் பிரதமர் உரை

Posted On: 23 FEB 2022 3:59PM by PIB Chennai

2022-23 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பதற்காக, ‘குடிமக்களில் ஒருவரைக் கூட பின்தங்க விடாமல் இருப்பது என்ற கருப்பொருளில், மத்திய பட்ஜெட் 2022-க்கு பிந்தைய வலையரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தத் தொடரின் இரண்டாவது வலையரங்கு இதுவாகும். தொடர்புடைய மத்திய அமைச்சர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

‘அனைவருடன், அனைவரின் நலனுக்காக, அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சியுடன் எனக் கூறி தமது உரையை தொடங்கிய பிரதமர், இந்த தாரகமந்திரம் அரசின் அனைத்து கொள்கைகளுக்கும் உத்வேகமாக உள்ளது என்று கூறினார்.

விடுதலையின் அமிர்த காலத்திற்கான எங்கள் உறுதிமொழிகள் அனைவரின் முயற்சியால் மட்டுமே நனவாகும். மேலும், ஒவ்வொரு தனிமனிதரும், பிரிவினரும், பிராந்தியமும் வளர்ச்சியின் முழுப் பயனைப் பெறும்போதுதான் அந்த முயற்சியை அனைவராலும் செய்ய முடியும் என்று பிரதமர் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள ஆறு நகரங்களில், மலிவு விலையில் வீடுகளை மேம்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பிரதமரின் வீட்டுவசதி (நகர்ப்புற) திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்க திட்டங்களை நிர்மாணிப்பது குறித்தும் பிரதமர் பேசினார். நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மற்ற மலிவு விலை வீட்டுவசதி திட்டங்களிலும் இதுபோன்ற கட்டுமானத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிரதமரின் தொடக்க உரைக்குப் பிறகு, பட்ஜெட் அமலாக்க செயல்திட்டங்களை வகுப்பது, உத்திகளை உருவாக்குவது குறித்து நிபுணர்களுடன் கலந்துரையாடுவதற்காக பல்வேறு அமர்வுகள் வரிசையாக நடைபெற்றன. மூத்த அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் தொழில் துறையினர் இவற்றில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800536

**********



(Release ID: 1800632) Visitor Counter : 177