பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பிஏஜேஎஸ்எஸ் அமைப்பை என்டிஆர்ஐ-யின் வள மையமாக்க, புதுதில்லியில் உள்ள தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாரதீய ஆதி பழங்குடியினர் சேவா அமைப்பு (பிஏஜேஎஸ்எஸ்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது
Posted On:
23 FEB 2022 11:24AM by PIB Chennai
பிஏஜேஎஸ்எஸ் அமைப்பை என்டிஆர்ஐ-யின் வள மையமாக்க, புதுதில்லியில் உள்ள தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாரதீய ஆதி பழங்குடியினர் சேவா அமைப்பு பிஏஜேஎஸ்எஸ் இடையே, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா முன்னிலையில், 21 பிப்ரவரி 2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், உத்தராகண்ட் பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் திரு எஸ் எஸ் டோலியா மற்றும் பாரதீய ஆதி பழங்குடியினர் சேவா அமைப்பு சார்பில் அதன் தலைவர் திரு நயன் சந்திர ஹெம்பிராம் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
முக்கிய அம்சங்கள் :
பழங்குடியினர் பற்றிய அரிய நூல்களை பேணிப் பாதுகாத்து அவற்றை டிஜிட்டல் மயமாக்குவதுடன், பழங்குடியினர் அருங்காட்சியகத்தை புதுப்பித்து டிஜிட்டல் மயமாக்குவதே இந்த புரந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, தலைசிறந்த அறிஞர்கள், ஆதி பழங்குடியினர் சேவா அமைப்புடன் இணைந்து பணியாற்றியிருப்பதாகவும், டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்த அமைப்பின் முதல் தலைவராக பணியாற்றியிருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் பழங்குடியின மக்களின், அனைத்து உள்ளார்ந்த சேவைகள் மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக, தலைசிறந்த சமூக சேவகரான திரு தக்கர் பாபாவால் 1948ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுதான் ஆதி பழங்குடியினர் சேவா அமைப்பு என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800457
****
(Release ID: 1800523)
Visitor Counter : 283