ஜல்சக்தி அமைச்சகம்
நிதிநிலை அறிக்கையின் நேர்மறையான தாக்கம் குறித்த கருத்தரங்கில் ‘ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்தின்’ கீழ் நீர் மற்றும் சுகாதாரம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
Posted On:
22 FEB 2022 7:39PM by PIB Chennai
தற்சார்பு இந்தியா இலக்கை அடைவதன் ஒரு பகுதியாக, கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது குறித்த இணையக் கருத்தரங்கு நாளை நடத்தப்படுகிறது. பட்ஜெட் 2022-ல் நீர் மற்றும் சுகாதார திட்டங்களை அமல் படுத்துவது குறித்து இதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாளை காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார். ஜல்சக்தி துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத், இத்துறை இணையமைச்சர்கள் திரு பிரகலாத் சிங் படேல், திரு பிஸ்வேஸ்வர் துடு மற்றும் ஐ.நா அமைப்பின் நிபுணர்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் உரையாற்றுகின்றனர்.
நாளை காலை 11 மணியளவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் நீர் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள், தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் இதர தரப்பினர் நிதிநிலை அறிக்கை மற்றும் கிராம வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியதன் தாக்கம் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வர்.
30 மாத காலத்தில், 9 கோடிக்கும் மேற்பட்ட கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. கோவா, தெலங்கானா மற்றும் ஹரியானா மாநிலங்கள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், தத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது . மற்ற மாநிலங்களில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் வேகமாக நடக்கின்றன. பஞ்சாபில் 99 சதவீதப் பணிகளும், இமாச்சலப் பிரதேசத்தில் 93 சதவீதப் பணிகளும், குஜராத்தில் 92 சதவீதப் பணிகளும், பீகாரில் 90 சதவீதப் பணிகளும் நிறைவடைந்து விட்டன. இந்த மாநிலங்களில் இந்தாண்டில் அனைத்து வீடுகளும் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றவையக மாறும்.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800370
******************
(Release ID: 1800394)
Visitor Counter : 163