வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
மத்திய பட்ஜெட் 2022-ஐ செயல்படுத்துவது குறித்த கருத்தரங்கில் பிரதமர் பங்கேற்கிறார்
Posted On:
22 FEB 2022 4:28PM by PIB Chennai
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஆகியவை பிற அமைச்சகங்களுடன் இணைந்து 23 பிப்ரவரி 2022 அன்று நடத்தவுள்ள வலையரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடக்க உரையை நிகழ்த்துகிறார்.
2022-23 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க 'லீவிங் நோ சிட்டிசன் பிஹைண்ட்' (மக்களில் ஒருவரை கூட பின்தங்கவிடாமல்) என்ற தலைப்பில் அரசால் அறிவிக்கப்பட்ட வலையரங்கு தொடரின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அரசு அதிகாரிகள், பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகள், நிறுவனங்கள், ஆலோசகர்கள், துறைசார் வல்லுநர்கள், ரியல் எஸ்டேட் தொழிலைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் இதில் பங்கேற்பார்கள். கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாடு தொடர்பான பல்வேறு களங்கள் குறித்து வெவ்வேறு அமர்வுகள் நடத்தப்படும்.
மலிவு விலை வீடுகள், குடிநீர், ரயில், கைபேசி, அகண்ட அலைவரிசை இணைப்பு, பெண்களை மையமாகக் கொண்டு கிராமப்புற ஏழைகளுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்தல், வங்கிச் சேவைகள், நில நிர்வாகத்தை எளிதாக்குதல் போன்றவற்றில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
பட்ஜெட் அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதற்காக ஆறு அமர்வுகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன. 2022-23 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நகர்ப்புற வீட்டுவசதியின் முக்கியத்துவத்தையும் நகரமயமாக்கலின் வேகத்தையும் அங்கீகரிக்கும் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்குக் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றும் இதற்காக ₹48,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு https://pmayu.webex.com/pmayu/j.php?RGID=r7fcea2cedbeb286316ae7eed8f1b12d7 எனும் இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800299
**********************
(Release ID: 1800344)
Visitor Counter : 281