நித்தி ஆயோக்

இந்திய போக்குவரத்து துறையில் கரி வாயு நீக்கம் செய்வதற்கு பசுமை நிதியளித்தல் அவசியம்

Posted On: 22 FEB 2022 3:30PM by PIB Chennai

என்டிசி-ஆசியாவுக்கான போக்குவரத்து முன்முயற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக 'போக்குவரத்து துறையில் கரி வாயு நீக்கம் செய்வதற்கான நிதியளித்தல்' குறித்த காணொலி வாயிலான ஆலோசனை பயிலரங்கை ஜி ஐ இசட் இந்தியாவின் ஆதரவுடன் நிதி ஆயோக் மற்றும் உலக வளங்கள் நிறுவனத்தின் இந்திய அலுவலகம் நடத்தின.

நிலைத்தன்மை மிக்க போக்குவரத்து வசதிகளை ஏற்றுக் கொள்வதன் மீதான முக்கிய கவனத்துடன் போக்குவரத்து துறையில் கரி வாயு நீக்கம் செய்வதற்கு இந்திய அரசு முனைப்புடன் பணியாற்றி வருகிறது.  இந்த லட்சியத்தை எட்டுவதற்காக நிதி நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளை ஒன்றிணைப்பதற்கான, செயல்படுத்தக்கூடிய உத்திகளை அடையாளம் காண்பதும், புதுமையான நிதிக் கொள்கைகளை மேம்படுத்துவதற்காக ஒன்றிணைந்து பணியாற்ற வைப்பதும் இந்த பயிலரங்கின் நோக்கங்கள் ஆகும்.

பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், இந்தியாவில் உள்ள வங்கிகளின் அதிகாரிகள், சர்வதேச நிதி அமைப்புகளின் அலுவலர்கள், தனியார் துறையினர் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டனர். தலைமை உரையை நித்தி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் திரு அமிதாப் காந்தும், சிறப்புரையை ஜெர்மனியின் அமைச்சர் மற்றும் பொருளாதார மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான துறையின் தலைவர் டாக்டர் ஸ்டீபன் கோச்சும் வழங்கினர்.

"இந்தியாவுக்கு தூய்மையான போக்குவரத்து அமைப்பை வாங்குவதற்கு நமக்கு பல்வேறு நிதி ஆதாரங்கள்  தேவை. மாநிலங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் ஆகியோரை நாம் இதற்காக ஒன்றிணைக்க வேண்டும்," என்று திரு அமிதாப் காந்த் கூறினர்.

டாக்டர் ஸ்டீபன் கோச் பேசுகையில், "போக்குவரத்தை மின்சாரமயம் ஆக்குவதற்கு மிகவும் வலிமையான செயல்திட்டம் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது. இதில் நிதி வசதி முக்கியப் பங்காற்றுகிறது. பல்வேறு பங்குதாரர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும்," என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800286

***************(Release ID: 1800341) Visitor Counter : 252