உள்துறை அமைச்சகம்

எல்லைப்பகுதிக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தின் தொகுப்புத் திட்டத்தை 2021-22 முதல் 2025-26 வரை தொடர்வது என மோடி அரசு முடிவு செய்துள்ளது

Posted On: 21 FEB 2022 5:41PM by PIB Chennai

“எல்லைப்பகுதிக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தின்” மத்திய தொகுப்புத் திட்டத்தை 15-வது நிதி ஆணைய சுழற்சியில் 2021-22 முதல் 2025-26 வரை ரூ.13,020 கோடி செலவில் தொடர்வதற்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷாவின் வழிகாட்டுதலின்படி எல்லைக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்த உள்துறை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. இந்த முடிவு எல்லைப்பகுதி நிர்வாகம், காவல், எல்லைகளைப் பாதுகாப்பது என எல்லைப்பகுதி அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும்.

எல்லைப்பகுதியில் வேலி அமைத்தல், எல்லைப் பகுதியில் ஒளி வெள்ள விளக்குகள் அமைத்தல், தொழில்நுட்ப தீர்வுகள், எல்லைப்பகுதி சாலைகள், இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – பங்களாதேஷ், இந்தியா – சீனா, இந்தியா – நேபாளம், இந்தியா – பூடான், இந்தியா – மியான்மர் எல்லைகளைப் பாதுகாக்க எல்லைப்பகுதி புறச்சாவடிகள் / படைகளின் செயல்பாட்டுத் தளங்கள் போன்ற கட்டமைப்பை உருவாக்க எல்லைக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத் திட்டம் உதவும்.

 

*****



(Release ID: 1800086) Visitor Counter : 176