தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கடற்படை கப்பல்கள் ஆய்வு நிகழ்ச்சியை தூர்தர்ஷன் நேரலையாக ஒளிபரப்புகிறது
Posted On:
20 FEB 2022 11:05AM by PIB Chennai
பிப்ரவரி 21-ம்தேதி இந்திய கடற்படையின் கப்பல்களை குடியரசு தலைவர் பார்வையிடும் நிகழ்ச்சியை தூர்தர்ஷன் நேரலையாக ஒளிபரப்புகிறது.
விசாகபட்டினத்தில் நடைபெறும் இந்த சம்பிரதாய நிகழ்வில் குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில், இந்திய கடலோர காவல்படை, இந்திய வர்த்தக கப்பல்கள் உள்பட இந்திய கடற்படையைச் சேர்ந்த 60 கப்பல்கள், கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் விமானங்கள் கலந்து கொள்கின்றன. இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு கொண்டாட்டத்தைக் குறிக்கும் இந்த ஆண்டின் கருப்பொருள் ‘ இந்திய கடற்படை- நாட்டின் சேவையில் 75 ஆண்டுகள்’ என்பதாகும்.
இந்த ஆண்டு தூர்தர்ஷன் இந்நிகழ்ச்சியில் பல்வேறு புதுமைகளை செய்யவுள்ளது. குறைந்தபட்சம் 30 ட்ரோன் கேமராக்களுடன், முதன்முறையாக தரையிலும், கடலிலும் அமைக்கப்பட்ட பல்முனை கேமராக்கள் இதனைப்படம் பிடிக்கும். நிலத்திலும், கடலிலும் காட்சிகளை துல்லியமாக காட்டும் உயர்தொழில்நுட்ப லென்சுகள் இதில் பயன்படுத்தப்படவுள்ளன. இந்தப் பிரம்மாண்டமான நிகழ்ச்சியை ஒளி,ஒலிபரப்ப ஏராளமான முன்னேற்பாடுகளை தூர்தர்ஷனும், அகில இந்திய வானொலியும் செய்துள்ளன. இந்தக்காட்சிகள் அனைத்தும் எச்டி எனப்படும் வடிவில் படம்பிடிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799751
****
(Release ID: 1799807)
Visitor Counter : 221