கலாசாரத்துறை அமைச்சகம்

விடுதலைப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

Posted On: 20 FEB 2022 11:10AM by PIB Chennai

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • 'வந்தே பாரதம்' ஒலிப்பதிவை மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி  மீனாட்சி லேகி வெளிடுகிறார்.
  • புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர் மற்றும் பாடலாசிரியருமான  திரு. பிரசூன் ஜோஷியின் தொடக்க உரையாற்றுகிறார்.
  • பேராசிரியர் ரமேஷ் சி கவுர், டீன் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் தலைவர் எழுதிய ‘இந்தியாவின் பழங்குடி மற்றும் உள்நாட்டு மொழிகள்’ என்ற புத்தக வெளியீட்டு விழா.
  • கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ் மற்றும் தபேலா மேஸ்ட்ரோ பிக்ரம் கோஷ் ஆகியோரின் நேரடி கச்சேரி.

விடுதலைப் பெருவிழா கொண்டாட்டங்களின் கீழ், சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, மத்திய  கலாச்சாரத்துறை  அமைச்சகம், புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் 21 முதல் 22 பிப்ரவரி 2022 வரை இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு செய்துள்ளது.

மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை குறித்த  விழிப்புணர்வு மற்றும் பல்வேறு மொழிகளை ஊக்குவிக்கவும், ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம்  21 -ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. உலகில் உள்ள மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும்  அனைத்து மொழிகளின்  பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான  பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தினம் உள்ளது. சர்வதேச தாய்மொழி தினத்தை கொண்டாடும் எண்ணம் முதலில் வங்கதேசத்தில் இருந்து வந்தது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) பொது மாநாட்டில், பிப்ரவரி 21 தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்த சிறப்பு தினத்தை கொண்டாடும் வகையில்  யுனெஸ்கோவால் ஒரு தனித்துவக் கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

2022-ம் ஆண்டின் கருப்பொருள்: “பன்மொழிக் கற்றலுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்:

சவால்கள் மற்றும் வாய்ப்புகள்”,இது அனைவருக்கும் பன்மொழிக் கல்வியின் முன்னேற்றம்,  தரமான கற்பித்தல் முறை மற்றும் கற்றலின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில்    தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்துகிறது.

இந்த நாளைக் குறிக்கும் வகையில், கலாச்சார அமைச்சகம், இந்திரா காந்தி தேசிய கலை மையம் மற்றும் யுனெஸ்கோ புது தில்லி கிளஸ்டர் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து நேரடி மற்றும் மெய்நிகர் என இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலாச்சாரத்துறை   செயலாளர் திரு கோவிந்த் மோகன் முக்கிய உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து புதுதில்லியின் யுனெஸ்கோ கிளஸ்டர் அலுவலகத்தின் இயக்குனர் திரு எரிக் ஃபால்ட் மற்றும் புகழ்பெற்ற பாடலாசிரியரும் கவிஞருமான பிரசூன் ஜோஷி ஆகியோர் உரையாற்றுகின்றனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரபல பேச்சாளர்களின் உரைகள்  தாய்மொழியில் கவிதை, குழு பாடல் ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெறும். சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’, இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் தலைவர் பேராசிரியர் ரமேஷ் சி கவுர், எழுதிய ‘இந்தியாவின் பழங்குடி மற்றும் பூர்வீக மொழிகள்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெறும்.

பின்னர் மாலை நடைபெறும் 'ஏகம் பாரதம்' நிகழ்ச்சியில் மத்திய கலாசாரம் மற்றும் வெளியுறவுத்துறை இணையமைச்சர்  திருமதி. மீனாட்சி லேகி ‘வந்தே பாரதம்’ ஒலிப்பதிவை முறைப்படி வெளியிடுகிறார். கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ் மற்றும் தபேலா மாஸ்ட்ரோ பிக்ரம் கோஷ் இணைந்து உருவாக்கிய இந்தப் பாடலை, 2022-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் கலாச்சார அமைச்சகம் வழங்கும் நடன நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தது.

இந்த நிகழ்வில் இசைக் கலைஞர்கள் இணைந்து நேரடி நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

 

மேலும், ஒரே மேடையில் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், மனிதாபிமானிகள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவின் கலந்துரையாடல் நிகழ்ச்சியம் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து கலாச்சார நிகழ்ச்சிகளும்  நடைபெறும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799752

****



(Release ID: 1799804) Visitor Counter : 328