ஜல்சக்தி அமைச்சகம்
நாட்டில் 100 மாவட்டங்கள் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ‘அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்’ என்பதாக மாறியிருக்கின்றன
Posted On:
18 FEB 2022 4:32PM by PIB Chennai
2022 பிப்ரவரி 16 அன்று 9 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும் மைல் கல்லை எட்டிய பின் இன்று நாட்டில் 100 மாவட்டங்கள் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ‘அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்’ என்ற மற்றொரு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இமாச்சலப் பிரதேசத்தின் முன்னேற விரும்பும் மாவட்டமான சம்பா 100-வது மாவட்டமாக மாறியுள்ளது. முன்னேற விரும்பும் மாவட்டங்களில் சம்பா மாவட்டம் ‘அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்’ என்பதை நிறைவேற்றியுள்ள 5-வது மாவட்டமாக உள்ளது.
2024-க்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தூய்மையான குடிநீர் வழங்குதல் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற இரண்டரை ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் கொவிட்-19 மற்றும் முழு ஊரடங்கு தடைகள் இருந்தபோதும் ஜல் ஜீவன் இயக்கம் கிராமப் பகுதிகளில் 5.78 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகத்தை அளித்துள்ளது.
2022-ல் ‘அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்’ என்பதற்கு மாறும் நிலையில், பஞ்சாப் (99%), இமாச்சலப்பிரதேசம் (92.5%), பீகார் (90%) போன்று மேலும் பல மாநிலங்கள் உள்ளன. ஜல் ஜீவன் இயக்க அமலாக்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புத்தன்மையை உறுதி செய்ய ஜெஜெஎம் தகவல் பலகையை https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx என்ற இணையதளத்தில் காணலாம்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799286
***************
(Release ID: 1799339)