குடியரசுத் தலைவர் செயலகம்
ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பிப்ரவரி 19 முதல் 22 வரை குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்
Posted On:
18 FEB 2022 6:07PM by PIB Chennai
ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பிப்ரவரி 19 முதல் 22 வரை குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பூரியில் கௌடியா மடத்தையும், இயக்கத்தையும் நிறுவிய ஸ்ரீமத் பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாத்-ன் 150-வது பிறந்த ஆண்டின் 3 ஆண்டு கால கொண்டாட்டங்களை 2022 பிப்ரவரி 20 அன்று குடியரசுத் தலைவர் தொடங்கி வைப்பார்.
2022 பிப்ரவரி 21 அன்று விசாகப்பட்டினத்தில் கப்பல் படை போர் விமானத்தை ஆய்வு செய்யும் குடியரசுத் தலைவர் அணிவகுப்பையும் பார்வையிடுவார். கப்பல் படை போர் விமானத்தை குடியரசுத் தலைவர் ஆய்வு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக முப்படைகளின் உயர்நிலைத் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவரின் பதவிக்காலத்தில் ஒரு முறை இந்திய கப்பல் படையின் போர் விமானத்தை அவர் ஆய்வு செய்வார்.
*****
(Release ID: 1799336)
Visitor Counter : 191