கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நீர்வழி டாக்சி சேவையை மும்பையில் திரு சர்பானந்த சோனாவால் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்

Posted On: 17 FEB 2022 4:50PM by PIB Chennai

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நீர்வழி டாக்சி சேவையை மும்பை மக்களுக்கு  பெலாப்பூர் துணை துறைமுகத்திலிருந்து இணையம் வழியாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இன்று கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பெலாப்பூரில் நேரடியாக தலைமை வகித்த மகாராஷ்ட்ர முதலமைச்சர் திரு உத்தவ் தாக்கரே, புதிதாக கட்டப்பட்ட  பெலாப்பூர் துணை துறைமுகத்தையும் தொடங்கிவைத்தார்.

மகாராஷ்ட்ராவின் கடலோரப் பகுதி மக்களின் நீண்டகால விருப்பமான நீர்வழி டாக்சி சேவை முதலில், இரட்டை நகரங்களான மும்பை- நவி மும்பையை இணைக்கும்.  நீ்ர்வழி டாக்சி  சேவை சுற்றுலாவுக்கு  குறிப்பாக நவி மும்பையிலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க யானைத்தீவு குகைகளுக்குப் பயணம் செய்ய மாபெரும் உத்வேகம் அளிக்கும். மேலும், நவி மும்பையிலிருந்து  எளிதாக இந்திய நுழைவாயிலுக்குப்  பயணம் செய்ய இயலும். 

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின்  சாகர்மாலா திட்டத்தின் கீழ் 50-50 நிதியுடன் ரூ.8.37 கோடி செலவில் பெலாப்பூர் துணைத் துறைமுகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவில் ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான 131 திட்டங்கள் அமலாக்கத்திற்கு அடையாளம் காணப்பட்டுள்ளன என்று காணொலி காட்சி மூலம் உரையாற்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்தார். இவற்றில் ரூ.2,078 மதிப்புள்ள 46 திட்டங்களுக்கு சாகர்மாலா திட்டத்தின்கீழ் நிதியுதவி செய்யப்படுவதாக அவர் கூறினார். மீனவர் சமூகத்தின் மேம்பாட்டிற்காக சாகர்மாலா திட்டத்தின் கீழ் நான்கு  மீன்பிடி துறைமுக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்துவதில் ஆக்கப்பூர்வ பங்களிப்பு செய்வதற்காக மகாராஷ்ட்ர  அரசுக்கு திரு சோனாவால் நன்றி தெரிவித்தார்.

மேலம் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799056

***************(Release ID: 1799082) Visitor Counter : 92