நிதி அமைச்சகம்
வருமான வரித்துறையின் மின்னணு -தாக்கல் தளத்தில் 29.8 லட்சத்திற்கும் அதிகமான பெரிய வரித் தணிக்கை அறிக்கைகள் பதிவு
Posted On:
16 FEB 2022 4:52PM by PIB Chennai
வருமான வரித்துறையின் மின்னணு -தாக்கல் தளத்தில் 2022 பிப்ரவரி 15 வரை 29.8 லட்சத்திற்கும் அதிகமான பெரிய வரித் தணிக்கை அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடைசி நாளில் மட்டும் 4.14 லட்சத்திற்கும் அதிகமான பெரிய வரித் தணிக்கை அறிக்கைகள்/படிவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 6.26 கோடி வருமான வரி தாக்கல்களில் 5.41 கோடிக்கும் அதிகமான தாக்கல்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. சரி பார்க்கப்பட்ட வருமான வரி தாக்கல்களில், 4.50 கோடி தாக்கல்கள் உரிய செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு 1.58 கோடி திரும்ப செலுத்துதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தாக்கல்களுக்கு வழங்கிய ஆதரவுக்காக வருமானவரி செலுத்துவோர் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள வருமான வரித்துறை, தங்களது பட்டயக் கணக்காளர் சமர்ப்பித்துள்ள வரித் தணிக்கை அறிக்கையை இன்னும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் வரி செலுத்துவோரை சமர்ப்பித்தல் செயல்முறையை விரைவில் நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798782
(Release ID: 1798795)