சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்தில் 409 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.44.48 லட்சத்தில் 737 உதவி மற்றும் உதவி பொருட்கள்

प्रविष्टि तिथि: 14 FEB 2022 6:01PM by PIB Chennai

மத்திய அரசின் சமூக மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கும் சமூக மேம்பாட்டு முகாமை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தல் துறை நடத்தி வருகிறது. அலிம்கோ மற்றும் மத்திய பிரதேசத்தின் நிவாரி மாவட்ட நிர்வாகத்துடன்  இணைந்து மத்திய அரசு நடத்தும் இந்த முகாம் நாளை காலை 11 மணிக்கு நடத்தப்படுகிறது.

 

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார்.

 

இந்நிகழ்ச்சியில், மத்தியப் பிரதேசம் நிவாரி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட, 409 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.44.48 லட்சத்தில் 737 உபகாரணங்கள் மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798320

                                                                                                *************


(रिलीज़ आईडी: 1798354) आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu