இந்திய போட்டிகள் ஆணையம்
சஜன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலதனப் பங்குகளை சோனா கம்பெனி பிரைவேட் லிமிடெட் வாங்க சிசிஐ ஒப்புதல்
Posted On:
14 FEB 2022 3:41PM by PIB Chennai
சஜன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலதனப் பங்குகளை சோனா கம்பெனி பிரைவேட் லிமிடெட் வாங்க சிசிஐ என்று அழைக்கப்படும் இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. போட்டியியல் சட்டம் 2002-ன் 31(1) பிரிவின் கீழ் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் விதிகள் படி நிறுவப்பட்டுள்ள சோனா கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்த அறிவிப்பு வெளியாகும் தேதி வரை இந்தியாவில் நேரடி நிறுவனங்களோ அல்லது முதலீடுகளோ இல்லை.
இந்தியாவில் வேளாண் இராசாயணங்கள் துறைக்கான வேதியியல் பொருட்களின் தயாரிப்பு, சிறப்பு ரசாயனங்களின் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் சஜன் இந்தியா லிமிடெட் ஈடுபட்டுள்ளது.
சஜன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலதனப் பங்குகளை சோனா கம்பெனி பிரைவேட் லிமிடெட் வாங்க இந்தியப் போட்டியியல் ஆணையம் அளித்துள்ள ஒப்புதல் குறித்த விரிவான உத்தரவு விரைவில் வெளியாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798273
******************
(Release ID: 1798344)