எரிசக்தி அமைச்சகம்
இந்தியாவின் எரிசக்தி மாற்ற இலக்குகள் குறித்து மாநிலங்களுடன் விவாதிப்பதற்கான மெய்நிகர் கூட்டத்திற்கு மத்திய எரிசக்தி துறை அமைச்சர் தலைமை வகித்தார்
Posted On:
11 FEB 2022 11:24AM by PIB Chennai
இந்தியாவின் எரிசக்தி மாற்ற இலக்குகளை அடைவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பங்கு குறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்திற்கு மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகங்களின் செயலர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை செயலர்கள், கூடுதல் தலைமைச் செயலர்கள் கலந்து கொண்டனர்.
பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை எரிசக்தி மாற்றத்தை உறுதி செய்வது குறித்த பிரதமரின் உறுதிப்பாட்டை செயல்படுத்தும் வாய்ப்புகள் மற்றும் ஆதாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சிஓபி 26 மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்புக்கிணங்க இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கார்பன் உமிழ்வை குறைத்தல் மற்றும் எரிசக்தி சேமிப்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் மாநிலங்களின் பங்கு குறித்து விவாதிப்பதே இதன் நோக்கமாகும்.
கூட்டத்தில் உரையாற்றிய திரு ஆர் கே சிங், பொருளாதாரத்தின் ஆற்றல் மிகுந்த துறைகளில் எரிசக்தி சேமிப்பை பெருமளவில் மேற்கொள்வதில் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் குறித்து முடிவு செய்வது அவசியம் என்று கூறினார். இது குறித்த இலக்குகளை நிர்ணயிக்க மாநில அரசுகள் செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். புதிய மற்றும் நவீன இந்தியாவை உருவாக்க பாடுபடும் நாம் நவீன எரிசக்தி முறைகள் இல்லாமல் இதனை முன்னெடுக்க முடியாது என்று அவர் கூறினார்.
2024-ம் ஆண்டுக்குள் வேளாண் துறையில் டீசல் இல்லாத நிலையை உருவாக்க, டீசலுக்கு மாற்றாக புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை இந்தியா பயன்படுத்தும் என திரு ஆர் கே சிங் தெரிவித்தார்.
2021 நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி-26 பருவநிலை உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் பருவ நிலை மாற்ற பாதிப்புகளை சமாளிக்க இந்தியாவின் 5 அம்ச பஞ்சாமிர்த திட்டங்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797488
***************
(Release ID: 1797591)
Visitor Counter : 407