சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

சதுப்புநிலங்களின் பாதுகாப்பு: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடவடிக்கைகள்

Posted On: 10 FEB 2022 1:29PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சவுபே கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

நாட்டில் உள்ள காடுகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. சதுப்புநிலங்கள் மற்றும் பவளப்பாறைகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை என்ற தேசிய கடலோரப் பணித் திட்டத்தின் மூலம் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ், சதுப்புநிலங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிர்வகிப்பதற்கான வருடாந்திர மேலாண்மை செயல் திட்டம்  அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-ன் கீழ் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் அறிவிப்பு (2019) மூலம் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன; வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972; இந்திய வனச் சட்டம், 1927; உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002; ஆகியவற்றின்ன் கீழ் விதிகள் அவ்வப்போது திருத்தப்படும்.

உலகளாவிய இயற்கை நிதியம், இந்தியா, வழங்கிய தகவலின்படி, மகாராஷ்டிரா, கோவா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் மேஜிக்கல் மாங்குரோவ் பிரச்சாரத்தின் மூலம் சதுப்புநில பாதுகாப்புக்காக மக்களுடன் உலகளாவிய இயற்கை நிதியம் கைகோர்த்துள்ளது.

சுமார் 180 தன்னார்வத் தொண்டர்கள் சதுப்புநிலப் பாதுகாப்பில் தங்கள் நேரத்தை அர்ப்பணித்துள்ளனர். தன்னார்வலர்களுக்கான விளக்கக்காட்சிகள், காணொலிகள், கதைப் புத்தகங்கள் மற்றும் சதுப்புநிலப் பயன்பாடு குறித்த தகவல் தொகுப்பு உள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797151

 



(Release ID: 1797253) Visitor Counter : 257