கூட்டுறவு அமைச்சகம்

கூட்டுறவு அமைப்புகளின் மறுமலர்ச்சி

Posted On: 09 FEB 2022 3:35PM by PIB Chennai

இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியத்தின் 2018 புள்ளிவிவரங்கள்படி நாட்டில் 8.54 லட்சம் கூட்டுறவு பிரிவுகள் உள்ளன. கூட்டுறவு அமைப்புகளின் துரிதமான, சமமான வளர்ச்சியை நிர்வாகம், தலைமை, தொழில் ரீதியான மேலாண்மை, குறைந்த அளவில் தொழில்நுட்ப பயன்பாடு ஆகிய குறைபாடுகள் பாதிக்கின்றன.

அடித்தள நிலை வரை செல்கின்ற மக்கள் சார்ந்த உண்மையான இயக்கமாக கூட்டுறவை வலுப்படுத்துதல் மற்றும் ‘இந்தியாவில் உற்பத்தி மீது கவனம் செலுத்துதல் உள்ளிட்ட பொருளாதார மாதிரி அடிப்படையில் கூட்டுறவை மேம்படுத்துதல் என்ற நோக்கத்துடன் புதிய தேசிய கூட்டுறவு கொள்கை மற்றும் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு அமைப்புகளை கூடுதல் வெளிப்படைத்தன்மையும், திறனும் கொண்டதாக மாற்றுவதற்கு கூட்டுறவுகள் குறித்த தேசிய தரவுகள் நல்ல செயல்பாட்டில் உள்ள சுமார் 63,000 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை டிஜிட்டல்மயமாக்குதல் போன்ற பொருத்தமான தலையீடுகள் குறித்து துறைக்கு சம்பந்தப்பட்டவர்களுடன் அமைச்சகம் ஆலோசனையைத் தொடங்கி உள்ளது.

மத்திய கூட்டுறவு அமைச்சர் திரு.அமித் ஷா இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

*****



(Release ID: 1796921) Visitor Counter : 195