சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

வாகனங்களுக்கு ஹைட்ரஜன் எரிபொருள்

Posted On: 09 FEB 2022 2:43PM by PIB Chennai

 

நாட்டில் வாகன எரிபொருளாக ஹைட்ரஜனை பயன்படுத்துவதற்கான அரசாணையை 16 செப்டம்பர் 2016-லேயே மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளதாக அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், இந்த அரசாணையின்  நான்காவது இணைப்பில் சிஎன்ஜியுடன் 18% ஹைட்ரஜன் கலந்து  பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.   மேலும், ஹைட்ரஜன் எரிபொருள், வாகனங்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் 2020ஆம் ஆண்டே வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹைட்ரஜன் அடிப்படையிலான போக்குவரத்து மற்றும் எரிபொருள், பேட்டரி தயாரிப்பது உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் தொடர்பான ஆராய்ச்சிக்கு உதவக் கூடிய திட்டங்களை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்  செயல்படுத்திவருவதாகவும் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம், உயிரிக்கழிவுகளை எரிபொருளாக்கி அதிலிருந்து உயர்தர ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான ஆலையையும், சென்னையில் உள்ள ஏஆர்சிஐ மையம் இருபது கிலோ வாட் திறன் கொண்ட எரிபொருள் பேட்டரிகளை  தயாரிப்பதற்கான  ஒருங்கிணைந்த தானியங்கி உற்பத்தி மையத்தை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதே போன்று தயாள்பாக் கல்விக்கழகம் தேசிய  சூரியசக்தி நிறுவனமும் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி தொடர்பான பல்வேறு புதுமையான திட்டங்களை மேற்கொண்டிருப்பதாக திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796799

                                                    *************** 



(Release ID: 1796821) Visitor Counter : 203