எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய தாது வளர்ச்சிக் கழகம், 2022 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 125% வளர்ச்சியை எட்டியுள்ளது

प्रविष्टि तिथि: 09 FEB 2022 12:11PM by PIB Chennai

இந்தியாவின் அதிக அளவில் இரும்புத் தாது உற்பத்தி செய்யும் தேசிய தாது வளர்ச்சிக் கழகம், இது 2021 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ரூ.8,522 கோடியுடன் ஒப்பிடுகையில், 2022 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 125% வளர்ச்சியை எட்டி, ரூ.19,179 கோடி அளவுக்கு விற்று வரவை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலத்தில் கிடைத்த வரிக்கு முந்தைய வருவாயான ரூ.4,633 கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.10,101 கோடி கிடைத்திருப்பது 118%  வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. வரிக்குப் பிந்தைய வருவாயாக கடந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் கிடைத்த ரூ.3,415 கோடியுடன் ஒப்பிடுகையில், 2022 நிதியாண்டின் ரூ.7,583 கோடியாக அதிகரித்திருப்பது 122% வளர்ச்சியாகும்.

2022 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் தேசிய தாது வளர்ச்சிக் கழகம், 10.65 மில்லியன் டன் இரும்பு தாதுவை உற்பத்தி செய்து 9.85 மில்லியன் டன் அளவிற்கு விற்பனை செய்துள்ளது.

இந்த சாதனைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள தேசிய தாது வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு சுமித் தேவ் முக்கியமான மூலதன ஏற்றுமதி திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயல்பாடுகளை இயந்திரமயமாக்கும் திட்டங்களை நிறைவேற்றி முடிக்க உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796752

-------


(रिलीज़ आईडी: 1796806) आगंतुक पटल : 304
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Punjabi