ரெயில்வே அமைச்சகம்
மேற்கு ரயில்வேயின் மும்பை கோட்டம், 100-வது ஜவுளி எக்ஸ்பிரசை இயக்கியது
Posted On:
09 FEB 2022 12:30PM by PIB Chennai
மேற்கு ரயில்வேயின் மும்பை மத்திய கோட்டம், சல்தாஹன் (சூரத் பகுதி) யிலிருந்து ஷாங்க்ரயில் (காரக்பர் கோட்டம், தென்கிழக்கு ரயில்வே)க்கு ஜவுளிப் பொருட்கள் ஏற்றிய 100-வது ரயிலை இயக்கி வரலாறு படைத்துள்ளது.
முதலாவது ரயிலை, ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷ்னா ஜர்தோஷ் உத்னாவிலிருந்து 01.09.2021 அன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
5 மாதங்களுக்குள் இந்த சாதனையை எட்டியிருப்பது, சூரத் ஜவுளித்துறையினர் ரயில்வே துறை மீது வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது. தென்கிழக்கு ரயில்வே-யின் ஷாங்க்ரயில், ஷாலிமர் மற்றும் கிழக்கு மத்திய ரயில்வேயின் தானாபூர் மற்றும் நாராயண்பூர் ஆகியவை இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய இடங்களாகும்.
இதுவரை சல்தாஹன்னிலிருந்து 67 என்எம்ஜி ரேக்குகளிலும், உத்னாவிலிருந்து 33 ரேக்குகளிலும் ஜவுளி அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஜவுளி எக்ஸ்பிரஸ் மூலம் இதுவரை ரயில்வேத்துறைக்கு ரூ.10.2 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
***************
(Release ID: 1796802)
Visitor Counter : 257