சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் டிஜிட்டல் சுகாதார சேவைகளின் வளர்ச்சி
Posted On:
08 FEB 2022 12:37PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
சுகாதாரச் சேவைகள் விநியோக முறையை நாடு முழுவதும் வலுப்படுத்துவதில் டிஜிட்டல் சுகாதார அம்மைப்பின் திறனை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, டிஜிட்டல் சுகாதார முன்முயற்சியைச் செயல்படுத்த பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதற்கான சூழலை உருவாக்க ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ், சுகாதார அடையாள அட்டை, சுகாதார பணியாளர்கள் பதிவேடு, சுகாதார வசதிகள் பதிவேடு மற்றும் தரவு பரிமாற்றத்திற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகிய முக்கிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட டிஜிட்டல் சுகாதாரச் சுற்றுச்சூழல் அமைப்பு, தொடர்ச்சியான பராமரிப்பை உறுதி செய்வதற்காக முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வசதிகள் முழுவதும் தரவுகளின் தடையற்ற பரிமாற்றத்தை ஆதரிக்கிறது.
குறைந்த செலவினங்கள், சரியான மருந்துகள் மற்றும் துல்லியமான பரிசோதனை, தனித்துவச் சிகிச்சைத் திட்டங்கள் மற்றும் சேவையின் தரம் ஆகியவற்றால் மக்கள் பயனடைகிறார்கள்.
கொவிட் மற்றும் கொவிட் அல்லாத நோய்களுக்காக மக்களுக்கு இலவசத் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக இ-சஞ்சீவனி தொலைமருத்துவ தளத்தை இந்திய அரசு செயல்படுத்தியுள்ளது. 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இது செயல்பட்டு வருகிறது. மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்தே ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகளைப் பெற இது உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796439
***************
(Release ID: 1796531)
Visitor Counter : 236