உள்துறை அமைச்சகம்
சுஸ்ரீ லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் இரண்டு நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
प्रविष्टि तिथि:
06 FEB 2022 11:15AM by PIB Chennai
சுஸ்ரீ லதா மங்கேஷ்கர் இன்று காலமானார் என்பதை இந்திய அரசு ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவித்துள்ளது. மறைந்த பிரமுகருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் இன்று முதல் இரண்டு நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
06.02.2022 மற்றும் 07.02.2022 ஆகிய நாட்களில் இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், மேலும் அரசுமுறை உபசரிப்பு மற்றும் பொழுதுபோக்கு எதுவும் இருக்காது.
சுஸ்ரீ லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
****
(रिलीज़ आईडी: 1795937)
आगंतुक पटल : 349